
புதுடெல்லி: சத்தீஸ்கரில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் ஆட்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதோரா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. கேரள எம்.பிக்கள் நடத்திய இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கலந்து கொள்ளவில்லை.
இந்த போராட்டத்தின்போது பிரியங்கா காந்தி கூறுகையில், ‘‘சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கேரள கன்னியாஸ்திரிகள் மீது வீண் பழி சுமத்தி அவர்களை கைது செய்துள்ளனர். போலீஸார் அவர்கள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர்.