
திருநெல்வேலி: நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கெனவே கைதான சுர்ஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டார். நெல்லை மாநகர போலீஸார் அவரைக் கைது செய்தனர். முன்னதாக நேற்று, கவின் செல்வகணேஷ் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சாரணடைந்த நிலையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.