• July 31, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: ​பிஹார் மாநிலம் பாட்​னா​வில் நாய்க்கு இருப்​பிடச் சான்​றிதழ் வழங்​கப்​பட்டது சர்ச்​சையை எழுப்​பி​யுள்​ளது. பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தப் பணி நடை​பெற்று வரும் நேரத்​தில் நடந்த இச்​சம்​பவம், அதி​காரப்​பூர்வ சரி​பார்ப்பு செயல்​முறை​கள் குறித்து கேள்வி​களை எழுப்​பி​யுள்​ளது.

நாய்க்கு வழங்​கப்​பட்ட இருப்​பிடச் சான்​றிதழ் விவர​மும் வெளி​யாகி​யுள்​ளது. அந்​தச் சான்​றிதழ் எண் பிஆர்​சிசிஓ/2025/15933581, வார்டு எண் 15, மசாவர்ஹி நகராட்சி கவுன்​சில் என்​றும் இந்த பகு​தி​யில் பாபு (நாய்) வசித்து வரு​கிறார் என்​றும் அந்த சான்​றிதழில் குறிப்பிடப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *