
90ஸ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கோவாவில் ஒன்று கூடியிருக்கிறார்கள். இயக்குநர்கள் ஷங்கர், லிங்குசாமி, மோகன் ராஜா தொடங்கி நடிகர், நடிகைகள் பலரும் இந்த ரீயூனியனுக்கு வந்திருக்கிறார்கள்.
அங்கிருந்து இவர்கள் வெளியிட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.
ஆட்டம், கொண்டாட்டம் என இந்த ரீயூனியன் நிகழ்வு களைகட்டியிருப்பது, இவர்கள் பதிவிடும் சமூக வலைதளப் பதிவுகள் மூலம் தெரிகிறது.
தற்போது இந்த ரீயூனியன் குறித்து நடிகை மாளவிகா, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஊடகத்திடம் பேசியிருக்கிறார்.
அதில் அவர், “அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த ரீயூனியன் அற்புதமான ஒன்றாக இருந்தது. இந்த நாட்களில் நாங்கள் அதிகமாகச் சிரித்தோம்.
சிரித்து சிரித்து என் வாய் வலித்துவிட்டது. இங்கு வேலை தொடர்பான எந்தப் பேச்சையும் நாங்கள் எடுக்கவில்லை. இந்த நிகழ்வை நான் தவறவிடாததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.
‘Naughty 90s’ என எங்களிடம் ஒரு வாட்ஸ்அப் குரூப் இருக்கிறது. அந்தக் குரூப்பில் மகேஷ்வரிதான் இப்படியான ஒரு ஐடியா குறித்துப் பதிவிட்டார்.
இந்தத் தேதியில் ஃப்ரீயாக இருந்தவர்கள் டிக்கெட் புக் செய்து, கோவாவுக்கு வந்துவிட்டனர்,” என்றார்.
இந்த ரீயூனியனில் நடிகை சிம்ரன், சங்கீதா, மீனா உட்பட பலரும் இணைந்து நடனமாடி ரீல்ஸும் பதிவிட்டிருந்தனர்.
அது குறித்து மாளவிகா, “அந்த ரீல்ஸை செய்வதற்கு ஐடியா கொடுத்தது சங்கீதாதான்!” எனக் கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, இந்த சந்திப்பு குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இயக்குநர் மோகன் ராஜா, “‘உனக்கும் எனக்கும்’ திரைப்படம் வெளியாகி 19 ஆண்டுகளைக் கடந்திருக்கும் நாளில், பிரபுதேவா மாஸ்டருடன் ஒரு புகைப்படம்,” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…