
‘மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்போம்’ என தனது எழுச்சிப் பயணத்தை ஜூலை 7-ம் தேதி, கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து தொடங்கிய எடப்பாடியார் 16 நாட்களில் 35 தொகுதிகளை கடந்து தனது முதல்கட்ட பிராச்சாரப் பயணத்தை முடித்திருக்கிறார்.
2010 ஜூலையில் அப்போதைய திமுக ஆட்சிக்கு எதிராக கோவையில் தான் தனது முதல்கட்ட பிரச்சார பொதுக்கூட்டத்தை நடத்தினார் ஜெயலலிதா. அம்மா வழியில் இபிஎஸ்ஸும் கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து சென்டிமென்டாக இப்போதைய திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கான தனது பிராச்சாரப் பயணத்தை அதே ஜூலை மாதத்தில் கடந்த 7-ம் தேதி தொடங்கினார். ஆட்சிக்கு எதிரான தனது பிரச்சாரப் பயணத்தின் தொடக்கம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் கோவையை தொடக்கப் புள்ளியாக தேர்வு செய்தார் இபிஎஸ். படை திரட்டுவதில் கைதேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தன்னளவில் சுறுசுறுவென சுழன்றார்.