• July 30, 2025
  • NewsEditor
  • 0

* ரஷ்யாவில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் சுனாமி எச்சரிக்கை விடுத்தன. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கையை தளர்த்தியிருந்தாலும் சிலே உள்ளிட்ட தென்னமெரிக்க நாடுகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு 25% வரி விதித்து உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள், எண்ணெய் வாங்குவதனால் கூடுதல் அபராதமும் விதிக்கப்படும் எனக் கூறியுள்ளார். ஆகஸ்ட் 1 முதல் இவை அமலுக்கு வரும்.

குஷ்பு

* தமிழக பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குஷ்புவுக்கு துணைத் தலைவர் பதவியும், கே.டி ராகவனுக்கு மாநில இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. விஜயதாரணி, சரத்குமார், அண்ணாமலைக்கு தேசிய அளவிலான பதவிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

* “1999ம் ஆண்டு சுப்பிரமணிய சுவாமி பேச்சைக் கேட்டு பாஜக அரசை கவிழ்த்து தவறு செய்துவிட்டோம்” எனக் கடம்பூர் ராஜு பேசியிருப்பதற்கு, “ஜெயலலிதாவின் முடிவைத் தவறு எனக் கூறுவதா…” என்று சர்சையை ஏற்பட்டுள்ளது.

* இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில்தான் பும்ராவை களமிறக்குவோம் என இந்திய அணி கூறியிருந்தது. நான்காவது டெஸ்டுடன் பும்ரா அதை நிறைவு செய்துள்ளார். அதனால் இன்று (31 ஜூலை) தொடங்கும் போட்டியில் பும்ரா விளையாட மாட்டாரா என்ற கேள்விக்கு, “பிட்சைப் பொறுத்து முடிவு செய்வோம்” என பதிலளித்துள்ளார் கேப்டன் கில்.

கில்
கில்

* தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கான My TVK என்ற செயலியை வெளியிட்டார் விஜய். விழாவில், “இதுக்கு முன்னாடி தமிழக அரசியலில் நடந்த இரண்டு பெரிய தேர்தல்களான 1967, 1977 போல 2026 தேர்தலும் அமையப் போகிறது. அதை உறுதியாக நம்புகிறோம்.” எனப் பேசியிருக்கிறார்.

* திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு ஊராட்சி சேர்ந்த புலிக்குத்தி காடு கிராமம் அருகே ஒரு தனியார் தோட்டத்தில்  3  பளியர் பழங்குடி குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து கொண்டு தங்கி இருந்தது தெரியவந்துள்ளது. அவர்களிடம் ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு போன்ற எந்த அடையாளமும் இல்லை எனக் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

* சிவகங்கையில் ‘மக்களை சந்திப்போம், தமிழகத்தைக் காப்போம்’ என்ற பரப்புரையை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “வேலியே பயிரை மேய்வது போல அஜித்குமார் வழக்கில் காவலர்கள் குற்றம் செய்துள்ளனர். இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகம் உள்ளது தமிழகத்தில் தான்.” எனக் கூறியதுடன் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

* பஹல்காம் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் பாஜக அரசுக்கு எதிராக முக்கிய கேள்விகளை முன்வைத்த சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் ராஜ்ய சபா எம்.பி கமல்ஹாசன்.

* குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் “கமலை எனக்குப் பிடிக்கும். அதை அவரிடம் தெரிவிக்க முயன்றபோது அவர் தங்கை என்று சொல்லிவிட்டார்,” என லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் பேசியது வைரலான நிலையில், “45 வயதில் ஒரு பிரபல நடிகரை நேரில் சந்தித்தபோது, உண்மையிலேயே ‘star-struck’ ஆகிவிட்டேன். அவர் என்னைப் பார்த்து, ‘என் சகோதரி மாதிரி இருக்கிறீர்கள்’ என்று சொன்னதும், என் நண்பர்கள் நகைச்சுவையாகக் கலாய்த்தார்கள்.” என விளக்கமளித்துள்ளார்.

ஜே.பி நட்டா

* நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே பிரதமர் மோடியை கண்டித்துப் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு மறுப்பு தெரிவித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா “மன சமநிலையை இழக்கிறார்” என விமர்சித்ததுடன் கடுமையான வார்த்தைகளை உபயோகித்தார். எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டத்துக்குப் பிறகு தான் பேசியவற்றைத் திரும்பப் பெற்றுக்கொண்டவர், அதற்காக மன்னிப்பும் கேட்டார்.

* திருநெல்வேலியில் மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கு தொடர்பாக கொலையாளி சுர்ஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

* நடிகை ராதிகா சரத்குமார் டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

* இந்தியா – அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பான நிசார் செயற்கைகோள் திட்டம் வெற்றிபெற்றுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகம்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *