
சென்னை: ஆடிப் பெருக்கை முன்னிட்டு 1090 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆக.2 (சனி) ஆக.3 (ஆடிப் பெருக்கு- ஞாயிறு) விடுமுறை என்பதால் சென்னை, கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆக.1,2 தேதிகளில் 690 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.