
சென்னை: மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால், அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சி.எம்.ஆர்.எல்) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில், மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களை சிலர் பயன்படுத்துகின்றனர். இதன் விளைவாக, எச்சில் துப்புவது, ஆங்காங்கே புகையிலை குப்பைகள் கொட்டுவது போன்ற சுகாதாரமற்ற நிலை காணப்படுகின்றன. இது தொடர்பாக புகார்கள் அதிகப்படியாக வந்தன.