
புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள வங்கிக் கணக்குகளில் ரூ.67 ஆயிரம் கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் அளித்த பதில்: கடந்த ஜுன் 30-ம் தேதி நிலவரப்படி நாட்டில் உள்ள வங்கிகளில் ரூ.67,003 கோடி தொகை. வாடிக்கையாளர்களால் நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் உள்ளது.