
‘ஸ்டோக்ஸ் இல்லை..’
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நாளை நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டிக்கான ப்ளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்திருக்கிறது. அந்த அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் ப்ளேயிங் லெவனில் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. காரணம் என்ன?
‘ப்ளேயிங் லெவன்…’
நாளை நடைபெறவிருக்கும் போட்டிக்கு வழக்கம்போல இன்றைக்கே ப்ளேயிங் லெவனை அறிவித்திருக்கிறது இங்கிலாந்து அணி. மான்செஸ்டரில் ஆடிய ப்ளேயிங் லெவனிலிருந்து நான்கு மாற்றங்களை இங்கிலாந்து அணி செய்திருக்கிறது. ஸ்பின்னரான லயாம் டாஸன், ஆர்ச்சர், ப்ரைடன் கார்ஸ், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ப்ளேயிங் லெவனில் இல்லை.
‘ஸ்டோக்ஸ் ஓய்வு – காரணம் என்ன?’
இவர்களுக்குப் பதிலாக கஸ் அட்கின்சன், ஜோஸ் டங், ஜேமி ஓவர்டன் ஆகியோர் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். நம்பர் 6 இல் ஜேக்கப் பெத்தேல் இறங்குவார் என்றும் இங்கிலாந்து அணி அறிவித்திருக்கிறது.
வலது தோள்பட்டையில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக ஸ்டோக்ஸ் இந்தப் போட்டியில் ஆடவில்லை. அவருக்குப் பதிலாக ஆலி போப் கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

“கடைசிப் போட்டியில் ஆட முடியாதது எனக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. ஆனால், என்னுடைய தோள்பட்டையில் கொஞ்சம் காயம் ஏற்பட்டிருக்கிறது. நான் இப்போது அதிலிருந்து மீண்டு அடுத்தடுத்த தொடர்களுக்குத் தயாராகும் வேலைகளைச் செய்ய வேண்டும்” என ஸ்டோக்ஸ் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…