
2026 மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் பல வியூகங்கள் வகுத்து யுத்திகளைக் கையாண்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக பாஜக-வில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
3 மாதங்களுக்கு முன்பு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை பதிவிக்காலம் நிறைவடைந்ததால், தமிழக பாஜக தலைவர் பதவி நயினார் நாகேந்திரனுக்குக் கொடுக்கப்பட்டது.
இன்று பல மாநில அளவிலான நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ஒப்புதலுடன் இந்த நியமன விவரங்கள் வெளியிடப்படுவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
இன்றைய அறிவிப்பின்படி 14 மாநில துணைத் தலைவர்களுள் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நடிகை குஷ்பு சுந்தர்.
பாஜக-வின் முன்னாள் பொதுச்செயலாளராக இருந்து வீடியோ சர்ச்சையில் சிக்கிய கே.டி.ராகவனுக்கு மாநில இணை அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மாநில துணைத் தலைவராக இருந்த நாராயணன் திருப்பதிக்கு மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில நிர்வாகிகள் மாற்றம்:


