
“என்னை மாதிரியே என் நண்பர் ஒருத்தர் சூப்பர் மார்க்கெட் வெச்சுருக்காரு. அவரு புதுக்கோட்டைய சேர்ந்தவரு. ஆனா, தமிழ்நாட்டுல இருக்க இன்னொரு ஊருல கடை வெச்சுருக்காரு.
கடந்த சனிக்கிழமை, அவரோடு கடைப் போனுக்கு ஒரு லிங்க் வந்துருக்கு. கடையில வேலை பார்க்கறவங்க எதார்த்தமா அந்த லிங்கை தொட, அடுத்த நொடியே, போன் ஹேங்க் ஆகியிருக்கு… அதிகமா சூடாகியிருக்கு.
அடுத்ததா, அந்தப் போன்ல இருந்த பேங்க் தகவல்கள் டெலீட் ஆயிருக்கு.
கொஞ்ச நேரத்துல, அவரோட பேங்க்ல இருந்து ஒரு மெசேஜ் வர்ற மாதிரி வந்துருக்கு. அதுல ஒரு ஆப்பை டௌன்லோடு செய்ய சொல்லி இருந்துருக்கு.
சாயந்திரம் நேரம், யு.பி.ஐ-ல வந்துருக்க காசை எல்லாம் செட்டில்மென்ட் அடிக்கணும்னு, அந்த மெசேஜ்ல சொல்லிருக்க ஆப்பை டௌன்லோடு செஞ்சுருக்காரு.
அந்த ஆப்பை ஓப்பன் செஞ்சதும் KYC மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கு. அதை அவரு பதிவு செஞ்சதும், அவரோட அக்கவுண்ட்ல இருந்து ரூ.50,000 அபேஸ் ஆயிருக்கு.
அதுவும் அவரு ஏதோ அமேசான்ல இருந்து பொருள் வாங்குன மாதிரி, மெசேஜோட காசு போயிருக்கு.
அந்தக் கடையில இருந்த விவரமான பையன் ஒருத்தர், போனை உடனே ஸ்விட்ச் ஆப் பண்ணி வெச்சுருக்காரு.
திங்கட்கிழமை, அவர் பேங்க்ல போய் கேக்கும்போது, “நல்ல வேளை ஸ்விட்ச் ஆஃப் பண்ணீங்க. திரும்பவும், உங்க அக்கவுண்ட்ல இருந்து ரூ.50,000 எடுக்க ட்ரை பண்ணிருக்காங்க.
நீங்க ஸ்விட்ச் ஆஃப் செய்ததால, அந்தப் பணத்தை அவங்களால எடுக்க முடியல”னு சொல்லிருக்காங்க.
அவருக்கு அப்போ ஓரளவுக்கு பெருமூச்சு வந்தாலும், ஏற்கெனவே அவரோட ரூ.50,000 போயிடுச்சு”.
– இது சென்னை கொத்தவால் சாவடி மார்கெட்டில் மளிகை மொத்த வியாபாரம் செய்யும் சத்தார் நம்மிடம் பகிர்ந்துக்கொண்ட சமீபத்திய சம்பவம் ஆகும்.

தெரியாத எண்ணில் இருந்து வரும் எந்தவொரு லிங்க், போட்டோ அல்லது வீடியோவையும் கிளிக் செய்துவிடக் கூடாது.
பின்னர், ஆப்பை டௌன்லோடு செய்யக் கூறி, எதாவது மெசேஜ் வந்தால், அது உண்மையில் யாரிடம் இருந்து வருகிறது என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை சரிப்பாருங்கள்.
OTP பதிவில் மிக உஷாராக இருக்க வேண்டும். OTP மூலம் நமது ஆதார் தகவல் முதல் வங்கி கணக்கு வரை என்ன மாற்றம் வேண்டுமானாலும் செய்ய முடியும். அதனால், ஜாக்கிரதை.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…