• July 30, 2025
  • NewsEditor
  • 0

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, பசிபிக் பெருங்கடல் முழுவதும் சுனாமி அலைகள் ஏற்பட்டுள்ளன.

ரஷ்யாவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஜப்பானின் பசிபிக் கடற்கரையை சுனாமி அலைகள் எட்டியுள்ளன.

ரஷ்யாவின் செவிரோ-குரில்ஸ்க் பகுதியில் காட்டும் வான்வழி காட்சிகளின்படி கடல் நீர் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்துள்ளன.

அமெரிக்காவின் கலிபோர்னியா, அலாஸ்கா, ஹவாய் மற்றும் நியூசிலாந்து வரையிலான கடற்கரைப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக AP செய்தி வெளியிட்டுள்ளது.

rep image

NHK World-ன் தகவலின்படி, காலையில் 20 செ.மீ. ஆக இருந்த அலைகள், ஜப்பானின் குஜி துறைமுகம், ஹமனகா நகரம் போன்ற இடங்களில் 60 செ.மீ. வரை உயர்ந்துள்ளன. சில பகுதிகளில் அலைகள் 3 மீட்டர் வரை எட்டக்கூடும் என ஜப்பானிய அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முக்கிய தேவையாக இருப்பது உணவு தான். அதன் பாதுகாப்பு குறித்து MHLW அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

ஜப்பானின் சுனாமி பாதித்த பகுதிகளில் உணவு மற்றும் நீர் தொடர்பாக மக்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வெள்ளநீருடன் தொடர்பு கொண்ட எந்த உணவையும் உடனடியாக தூக்கி எறிய வேண்டும், குறிப்பாக பச்சை இறைச்சி, மீன், கோழி, முட்டைகள் மற்றும் சமைத்து மீதமான உணவுகள். வெள்ளநீர் வீடுகளுக்கும் குடியிருப்பு இடங்களுக்கும் புகும்போது அவை கழிவுநீர், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் மற்றும் பாக்டீரியாக்களை கொண்டு வரலாம், இது உணவை சாப்பிட தகுதியற்றதாக மாற்றும்.

அறை வெப்பநிலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் வைக்கப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இத்தகைய நிலைகளில் பாக்டீரியாக்கள் வேகமாக பெருகும். உணவில் அசாதாரண வாசனை, நிறம் அல்லது அமைப்பு இருந்தால் அதனை சாப்பிடக்கூடாது. ஏனெனில் கெட்டுபோன உணவை உண்பது மூலம் நோய் பரவல் ஏற்படும்

மேலும் மக்கள் சிரமத்திற்குள்ளாகுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு நீர்ப்புகா பேக்கேஜிங்கில் மூடப்பட்ட உணவுகளை மட்டுமே உண்பது பாதுகாப்பானது. இதில் கிரானோலா பார்கள், உலர்ந்த பழங்கள் போன்றவை சேதமடையாமல் இருந்தால் அதனை சாப்பிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *