
இங்கிலாந்தைச் சேர்ந்த இசைக் கலைஞரான எட்வர்ட் கிறிஸ்டோபர் ஷீரன், உலகம் முழுவதும் பல ரசிகர்களைக் கொண்டவர்.
உலகின் பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி வரும் இவர், கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் ‘+–=÷× Mathematics Tour’ என்ற இசைக் கச்சேரியை மும்பையில் நடத்தியிருந்தார். அந்த சமயத்தில் நெட்டிசன்களும் எட் ஷீரனின் ‘Shape of You’, ‘Thinking Out Loud’, ‘Castle on the Hill’, ‘Photograph’, ‘Galway Girl’, ‘Perfect’ போன்ற ஹிட் பாடலைகளை வைரல் செய்திருந்தனர்.
இந்தியாவிற்கு வருகை தந்திருந்த ஷீரன், ஷாருக் கான், ரஹ்மான் போன்ற நட்சத்திரங்களை மட்டும் பார்க்கவில்லை, பல சிறிய பள்ளிகளுக்குச் சென்று அங்கிருக்கும் குழந்தைகளுடன் அமர்ந்து, பாடல்கள் பாடியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தன் குடும்பம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கும் எட் ஷீரன், “நான் என் குடும்பத்துடன் நேரம் செலவிட அதிகம் விரும்புவேன். அதுவும் என் குழந்தைகளுடன் இருப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால், பொதுவெளியில் சுதந்திரமாக அவர்களைக் கூட்டிச் செல்ல முடியாதது வருத்தமானது.
எங்கே சென்றாலும் என்னுடன் ஒரு பாதுகாவலர், என் மனைவியுடன் ஒரு காவலர், என் குழந்தைகளுக்குத் தனித்தனிகே காவலர்கள் என எந்நேரமும் பாதுகாவலர்கள் சூழ எங்கும் செல்ல வேண்டியிருக்கிறது. சமீபத்தில் குழந்தைகளை கடத்துவதாக மிரட்டல் வந்ததால் இப்படியான பாதுகாப்பு தேவையாகிவிட்டது.

இந்தப் பாதுக்காப்பு எல்லாம் இல்லாமல் என் குழந்தைகள் சாதாரண வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நானும் என் குடும்பம், குழந்தைகளுடன் சாதாரண வாழ்க்கையே வாழ விரும்புகிறேன். மக்களுடன் இயல்பாக வாழ்வதுதான் நிம்மதியான வாழ்வு. ஒரு கலைஞனாக நான் மக்களுடன் இருந்தால்தான் கற்றுக்கொள்ள முடியும், அவர்களின் ரசனையைப் புரிந்துகொள்ள முடியும்.” என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் எட் ஷீரன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…