
திருப்பதி: ஆந்திராவில் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தினம் முதல் மாநிலம் முழுவதும் மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியான இதனை அமல்படுத்த தீவிர ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஆந்திர மாநில அரசு பஸ் போக்குவரத்து கழக (ஏபிஎஸ்ஆர்டிசி) நிர்வாக இயக்குநர் துவாரகா திருமலராவ் திருப்பதி அடுத்துள்ள வெங்கடகிரி வாகாடு பேருந்து பணிமனையை ஆய்வு செய்தார்.