
புதுடெல்லி: பஹல்காம் சம்பவத்துக்குக் காரணமான 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி என்பது குறித்தும், `ஆபரேஷன் மகாதேவ்' குறித்த புதிய தகவல்களையும் தேசிய புலனாய்வு முகமை (என்ஏஐ) வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியில் கடந்த 3 மாதங்களாக இந்திய ராணுவமும் புலனாய்வு அமைப்புகளும் ஈடுபட்டு வந்தன.