
வீட்டிலிருந்து திருடிச் சென்ற நகையை மீண்டும் அதே வீட்டுக்குள் திருடன் வைத்து சென்ற ஆச்சர்ய சம்பவம் ஆண்டுதோறும் எதோவொரு மாவட்டத்தில் நடந்துகொண்டேதான் இதுக்கிறது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ரம்மதபுரத்தைச் சேர்ந்த ரீகன் (40) செல்போன் கடை நடத்திவருபவர். இவரது வீட்டில் சீரமைப்புப் பணி நடைபெற்றுவருவதால் வேலையாட்கள் அடிக்கடி வந்துபோவதுமாக இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று திடீரென அவரது வீட்டில் 6 1/2 பவுன் தங்க நகை காணாமல் போன சம்பவம் நடந்திருக்கிறது.
இதையறிந்த உடனே ரீகன், காவல்துறையில் புகாரளித்திருக்கிறார். இதில் ட்விஸ்ட் என்னவென்றால், அடுத்த சில மணிநேரங்களில் திருட்டப்பட்ட நகை ரீகன் வீட்டின் மேசையில் வைக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையில் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் திருடன் திருடிய நகைகளை எடுத்த இடத்திலே வைத்துச் சென்றிருக்கிறார். நகைக்கிடைத்தாலும் இந்த நகையை எடுத்தது வீட்டில் இருப்பவர்களா அல்லது வெளியிலிருந்து யார் திருட்டியிருப்பார்கள் என்று கண்டுபிடிக்க விசாரணை நடைபெற்று வருகிறது.