
சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கேம் டெவலப்பர், ஆர்டிஸ்ட் மற்றும் புரோகிராமர் திறன் பயிற்சிக்காக கூகுள், யூனிட்டி நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘நான் முதல்வன்’ திட்டத்தில், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் திறன்சார்ந்த பயிற்சிகள் பெற்று வருகின்றனர். மேலும் தமிழக மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்காக கூகுள் பிளே மற்றும் யூனிட்டி கேம் டெவலெப்பர் டிரைனிங் புரோகிராம் என்ற புதிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.