• July 30, 2025
  • NewsEditor
  • 0

விகடன் இதழுடன் உங்களுக்கு இருக்கும் பந்தம் குறித்து எழுத ஓர் அரிய வாய்ப்பு!

ஏறக்குறைய 100 ஆண்டுகளாக, தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு நீங்காத அங்கமாக விகடன் திகழ்ந்து வருகிறது. பொழுதுபோக்கு, அரசியல், சமூகச் செய்திகள் எனப் பல தளங்களில் விகடன் வாசகர்களின் எண்ணங்களை வளப்படுத்தி வருகிறது. உங்கள் நினைவுகளிலும், வாழ்க்கைப் பயணத்திலும் விகடனின் பங்கு என்ன? விகடன் இதழ் உங்கள் குடும்பத்தில் ஒருவராய்ப் பார்க்கப்பட்ட தருணங்கள் உண்டா? ஒரு செய்தியோ, ஒரு கட்டுரையோ, ஒரு புகைப்படமோ உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

இப்படியான உங்கள் அனுபவங்களை “விகடனும் நானும்” என்ற தலைப்பில் கட்டுரையாக எழுதி அனுப்பலாம்.

vikatan-logo

விகடன் இதழுடன் உங்களுக்கு ஏற்பட்ட முதல் அறிமுகம்.

விகடன் இதழ் உங்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கங்கள்.

விகடனின் எந்தப் பகுதி (கட்டுரை, தொடர், கார்ட்டூன், செய்தி) உங்களை அதிகம் கவர்ந்தது, ஏன்?

விகடன் இதழ் மூலம் நீங்கள் அறிந்து கொண்ட அல்லது கற்றுக்கொண்ட விஷயங்கள்.

விகடன் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய தனிப்பட்ட அனுபவங்கள் அல்லது மாற்றங்கள்.

இவ்வாறு விகடன் உடனான உங்களின் பந்தத்தை பற்றி எழுதலாம்.

நினைவில் கொள்க:

  • ஆசிரியர் குழுவால் தேர்வு செய்யப்படும் சிறந்த கட்டுரைகளுக்குப் பரிசுகள் காத்திருக்கிறது.

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

  • உங்கள் படைப்பைத் திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.

  • கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  • கட்டுரையின் நீளம் 500 முதல் 800 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.

  • உங்கள் கட்டுரைகளை my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

உங்கள் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *