
சென்னை: புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக இஸ்ரோ இன்று மாலை (ஜூலை 30) விண்ணில் செலுத்துகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) சேர்ந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக நிசார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்ற செயற்கைக்கோளை ரூ.12,000 கோடியில் வடிவமைத்துள்ளன.