
தற்போது தென்மேற்குப் பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. அடுத்து வட கிழக்குப் பருவமழை வர இருக்கிறது. மழை பெய்யும்போது நீரை சேமித்தால்தான் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு சேமித்து வைக்கும் தண்ணீரையும் பயன்படுத்த முடியும். பண்ணைகளில் மழைநீரை சேமிக்க வேண்டுமென்றால் அதற்கு சில தொழில்நுட்பங்கள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி முறையாக செய்தால் தண்ணீர் பற்றாக்குறையின்றி விவசாயம் செய்ய முடியும்.
அதற்கு வழிகாட்டும் விதமாக பசுமை விகடன் மற்றும்
நேஷனல் அக்ரோ பவுண்டேஷன் இணைந்து பணம் கொடுக்கும் பண்ணை நீர் மேலாண்மை! என்ற பயிற்சியை வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி, சனிக்கிழமை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த இல்லீடு கிராமத்தில் உள்ள நேஷனல் அக்ரோ பவுண்டேஷன் பயிற்சி மையத்தில் நடத்த இருக்கிறது.
இந்தப் பயிற்சியில் வட்டப்பாத்தி எடுத்தல், சொட்டுநீர் மூலமாக சிக்கனமாக நீர்பாசனம் செய்யும் முறைகள், கிணறு மற்றும் போர்வெல்களுக்கு நீர் செறிவூட்டும் முறைகள், பண்ணைக்குட்டை எடுத்தல் ஆகியவற்றை பற்றி வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் பேச இருக்கிறார். பேசுவதோடு களத்தில் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் விளக்க இருக்கிறார்.

உளி கலப்பை, 5 கலப்பை, ரோட்டோவேட்டர் போன்ற உழவு மூலமாக நிலத்தல் மழை நீரை சேமிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கிறார் நேஷனல் அக்ரோ பவுண்டேஷனைச் சேர்ந்த நீரியல் வல்லுநர் முனைவர் எஸ்.வி.முருகன்.
நாள்: 2-8-25 சனிக்கிழமை.
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை.
இடம்: கிராம மேம்பாட்டு மையம், நேஷனல் அக்ரோ பவுண்டேன், இல்லீடு கிராமம், மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம்.
(மதுராந்தகத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை செல்லும் வழியில் 30 கிலோமீட்டரில் உள்ளது).

சிறப்பம்சங்கள்
* வரப்பை வலுவாக அமைத்து மழைநீரைச் சேமிக்கும் முறைகள்.
* நிலத்துக்கு ஏற்றாற்போல் பண்ணைக்குட்டையை அமைப்பதற்கான வழிகாட்டல்கள்.
* செயல்படாத ஆழ்துளைக் கிணறுகளில் நீரை பெரும் செயல்முறைகள்.
* பண்ணையில் குழிகள், அகழிகளை அமைத்து நீரை சேமிக்கும் முறைகள்.
* பண்ணையில் நிலத்தடி நீரை சேமிப்பதற்கான வழிகாட்டல்கள்
* பருவ மழையை பயன்படுத்தி நிலத்தடி நீரை பெருக்கும் சூத்திரங்கள்.
இன்னும் இன்னும்…
அனுமதி இலவசம்
முன்பதிவு அவசியம்.
பெயர், முகவரி, செல்போன் எண்ணுடன் 9940022128 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளவும்.
நிகழ்வில் மதிய உணவு, தேநீர் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, 99400 22128, 94448 64884
கூகுள் மேப்(பயிற்சி நடைபெறும் இடம்)