
சென்னை: பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு பேருந்து சேவை வழங்குவது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் ஆலோசனை செய்து வருகிறது.
இது தொடர்பாக அத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 27 பணிமனைகளில் இருந்து நாள்தோறும் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் மாநகர பேருந்துகளில்கால் ஊன்ற இடம் இல்லாத அளவுக்கு கடுமையான நெரிசல் காணப்படும்.