
சென்னை: சென்னையிலிருந்து துர்காபூர் புறப்பட இருந்த விமானத்தின் அவசர கால கதவைத் திறக்க முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாரானது. விமானத்தில் 158 பயணிகள், 6 விமான ஊழியர்கள் இருந்தனர்.
விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு, விமானம் ஓடுபாதையில் ஓட இருந்தபோது, விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்படுவதற்கான எச்சரிக்கை மணி, விமான கேப்டன் கேபினில் ஒலித்தது. இதையடுத்து விமான பணிப்பெண்கள் விரைந்து சென்று அவசர கால கதவைத் திறக்க முயன்றது யார் என்பதை பார்த்தனர். அப்போது அவசர கால கதவு அருகே‌ உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சர்க்கார் (27) என்ற பயணிதான் கதவைத் திறக்க முயன்றார் என்பது தெரியவந்தது.