
சென்னை: கிண்டி பேருந்து நிலையத்தில் ரூ.400 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைப்பதற்கான முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில் தடத்திலும், தாம்பரம் – பிராட்வே பேருந்து வழித்தடத்திலும் கிண்டி முக்கிய மையமாக உள்ளது.
கிண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் ஐடி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இருப்பதால், பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். தினசரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வந்து செல்கின்றனர். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், கிண்டி ரயில் நிலையம் ரூ.13.50 கோடியில் மேம்படுத்தப்படுகிறது.