
சென்னை இது வெறும் நகரம் அல்ல. பலரின் நம்பிக்கை. மனித சரித்திரத்தில் மகத்தான நிகழ்வு என்பது மனிதர்களின் புலம் பெயர்வுதான் புலம் பெயர்தலால் நாகரிகம் பெற்றோம். புலம் பெயர்தலால் வளர்ச்சி அடைந்தோம். புலம் பெயர்தலால் வாய்ப்புகளை பெற்றோம். .ஆனால் சென்னைகான வருகை என்பது வெறும் புலம் பெயர்தல் மட்டும் அல்ல. அது நேர்மறை உணர்வு.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னையை நோக்கி படை எடுக்கிறார்கள். சென்னை சென்றால் பிழைத்து கொள்ளலாம். சென்னை சென்றால் வெற்றியை ஈட்டிவிடலாம். சென்னை சென்றால் பூர்வீக ஊரில் அடமானத்தில் இருக்கும் வீட்டை மீட்டுவிடலாம். சென்னை சென்றால்.. சென்றால் சென்றால்.. சென்னை சென்றால் என கனவுகள் முடிவிலியாக நீள்கிறது.
நவீன சென்னையின் வரலாறு மதராசபட்டிணம் கிராமத்தை 1639 இல் கிழக்கிந்திய கம்பெனி விலைக்கு வாங்கியதில் இருந்து தொடங்குகிறது. ஆனால், சென்னையின் வரலாறு என்பது அதற்கும் முந்தையது. சென்னைக்கு மிக அருகில் என கணக்கிட்டால் ஆதி மனிதன் வாழ்ந்த கூடியம் குகை வரை நீங்கள் கணக்கில் எடுத்து கொள்ளலாம்.
சென்னை மட்டும்தான் தமிழ்நாடா?
நிச்சயம் இல்லை தான். மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி என தமிழ் நிலமே தொன்மையானது. அடர்த்தியான வரலாற்றால் பின்னப்பட்டது தான். மறுப்பதற்கு இல்லை.
வளர்ச்சியை பரவலாக்க வேண்டும்தான். வாய்ப்புகளை எல்லா நகரங்களிலும் ஏற்படுத்தி தர வேண்டும்தான். இதவும் மறுப்பதற்கில்லைதான். ஆனால், சென்னை தரும் அண்மைய உணர்வு அலாதியானது.
அப்படியான சென்னையை கொண்டாடுவோம்.
சென்னை குறித்த உங்கள் உணர்வை, சென்னையில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை, சென்னை குறித்த உங்கள் கனவை சுவைப்பட எழுதுங்கள்.
சிறந்த கட்டுரைகள் விகடன் தளத்தில் பிரசுரிக்கப்படும். அதி சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகளும் உண்டு.
கட்டுரை அனுப்ப கடைசி நாள் : ஆக்ஸ்ட் 30, 2025