• July 29, 2025
  • NewsEditor
  • 0

2025 ஆகஸ்ட் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது. சகல கஷ்டங்களையும் நீக்கும் இந்த அபிவிருத்தி ஹோமத்தில் கலந்து கொண்டால் கிடைக்கும் 7 பலன்கள்!

பிரம்மஹத்தி ஹோமம்

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

தோஷங்களில் மிக மிகக் கடுமையானது பிரம்மஹத்தி தோஷம். இந்த தோஷம் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் முன்னோர்களுக்கு ஏற்பட்டு இருந்தாலும் அது உங்களை பாதிக்கும் என்கிறது சாஸ்திரம். வரகுண பாண்டியனைப் பிடித்திருந்த இந்த தோஷம் அவனைப் பாடாய்படுத்தி கடைசியில் திருவிடைமருதூரில் விட்டது என்கிறது புராணம். அதேபோல விக்ரமச் சோழனைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷமும் திப்பிராஜபுரம் சோளேஸ்வரர் கோயிலில் விட்டது என்பர். சரி அது என்ன பிரம்மஹத்தி தோஷம் என்கிறீர்களா!

நன்றி மறப்பது, நம்பிக்கை மோசடி செய்வது, பெண்ணை அவமதிப்பது, தந்தை தாய்க்கு உணவளிக்காமல் விரட்டுவது, காரணமின்றி உயிர்களை வதைப்பது, குருவை ஏசுவது, நம்பியவரிடம் ஏமாற்றுவது, கோயில் சொத்தைத் திருடுவது, மக்கள் சொத்தை அபகரிப்பது போன்ற பாவங்களால் இந்த தோஷம் ஏற்படும். இந்த தோஷம் உண்டானால் பிறகு அவரது வாழ்க்கையே போராட்டமாக மாறிவிடும் என்கிறது ஜோதிட சாஸ்திரம், எத்தனை முயன்றாலும் அவரிடம் தோல்வியே மிஞ்சும்; செல்வம் சேராது; உறவுகளால் தொல்லை உண்டாகும். தேவையில்லாத பிரச்னைகள் வரும். வம்பு வழக்குகள் சேரும். நியாயமான அவருடைய தேவைகள் கூட அவருக்குக் கிடைக்காது. எத்தனை உழைத்தாலும் பலன் கிடைக்காது. நேர்மையாக இருந்தாலும் மதிப்பு கிட்டாது. இவையெல்லாம் ஏன் என்று பார்த்தால் அவர் அப்போது அல்லது அவரின் முன்ஜென்மத்திலோ செய்த பாவங்களே எனப்படுகிறது.

இப்படி கடன்; நஷ்டம்; விரக்தி; தோல்வி; தடை என சகல துன்பங்களையும் நீக்கி வெற்றி தரும் ஒரு வழிபாடே பிரம்மஹத்தி பரிகார ஹோமம். இந்த அரிதினும் அரிதான ஹோமத்தை 2025 ஆகஸ்ட் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் உங்கள் சக்தி விகடன் நடத்த உள்ளது. அது என்ன அந்த ஊரில் என்கிறீர்களா!

பிரம்மஹத்தி ஹோமம்

திப்பிராஜபுரம்

கும்பகோணம் – மன்னார்குடி சாலையில் வலங்கைமானுக்கு அருகே அமைந்திருக்கிறது திப்பிராஜபுரம். தஞ்சையை ஆண்ட விஜயநகர மன்னர்களின் ஆட்சியில் அமைச்சராக இருந்த திப்பையா பெயரிலேயே திப்பையாராஜபுரம் என்றாகி அதுவே திப்பிராஜபுரம் என்றானது என்கிறது வரலாறு. இங்குள்ள சோளேஸ்வரர் கோயில் விக்ரம சோழனால் அமைக்கப்பட்டது. விக்ரம சோழனை கடுமையாகப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட இந்த ஆலயம் உருவானது என்றும் கூறப்படுகிறது. தொடர் தோல்விகள், பஞ்சம் பசி, எதிரிகள் தொல்லை என துன்பப்பட்டு வந்த சோழனை இங்குள்ள ஈசனே காத்தருளினார் என்கிறது தலவரலாறு. அக்னீ ஹோத்ரிகளும் மாபெரும் ஞானியரும் வாழ்ந்த புண்ணிய பூமி திப்பிராஜபுரம் என்று வரலாறும் கூறுகிறது.

இப்பேர்பட்ட க்ஷேத்ரத்தில் பக்தர்களின் வேதனைகளைத் தீர்க்கும் கலியுக வரதராக எழுந்தருளி இருக்கிறார் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர். திருமாலின் அம்சத்தையும் தாங்கியுள்ள அபூர்வ சிவலிங்க வடிவமே ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர். சிவ வழிபாடுத் தொன்மையானது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் 3000 ஆண்டுகள் பழைமையான மூலவர் இவர் என்கிறார்கள். சுந்தரகுஜாம்பிகை, கோவலர்வல்லி என இரு அம்பிகைகளோடு சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். முக்குறுணி விநாயகரும் ஸ்ரீதண்டாயுதபாணியும் இங்கே அருள்கிறார்கள். மேலும் ஸ்ரீசிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீஆனந்த நடராஜராஜ மூர்த்தி எழுந்தருளியுள்ளார். இந்த நடராஜர் சிதம்பரத்திலுள்ளது போல தாழ்சடையோடு, ஊம்மத்தம்பூ, கங்கை, சூடியபடி உள்ளார். மேலும் ஸ்ரீசந்திரமவுலீஸ்வரர் எனும் அபூர்வ ஸ்படிக லிங்கம் இங்கு உள்ளது இதற்கு தினந்தோறும் அபிஷேகம் நடைபெறுகிறது. அதைக் காண்பவரின் வேண்டுதல்கள் நிறைவேறுகிறது என்பதும் இக்கோயிலின் விசேஷம்.

பிரம்மஹத்தி ஹோமம்

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த ஆலயத்தின் நிர்வாகத்தைக் கவனித்து வரும் ஞானமூர்த்தி சிவகன்று ஸ்ரீகருணா அமுத சுவாமி அவர்கள் கருவிலேயே திரு படைத்த தவச்செல்வர். திருஞான சம்பந்தரைப் போல சிறுகுழந்தை முதலே பாடல்கள் புனையும் திருவருள் வாய்க்கப்பட்டவர். இவரின் அசாத்திய ஞானத்தைக் கண்ட குருதேவ் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் உள்ளிட்ட ஆன்மிகப் பெரியோர்கள் பலரும் இவரை ஆசிர்வதித்து பெருமை கொள்ளச் செய்திருக்கிறார்கள். இதுவரை 10,000 ஆன்மிகப் பாடல்களை இயற்றியுள்ள இந்த பால மகானின் மேற்பார்வையில் இந்த ஆலயத்தில் அன்பர்களின் குறைகளைத் தீர்க்கும் பிரம்மஹத்தி ஹோமம் நடைபெற உள்ளது. 2025 ஆகஸ்ட் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது.

சரி இந்த பிரம்மஹத்தி பரிகார ஹோமத்தில் ஏன் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். இதோ 7 காரணங்கள்!

1. வேலை, வியாபாரம், தொழிலில் உண்டாகி இருக்கும் சிக்கல்கள் யாவும் நீங்கும்.

2. திருமணத் தடை, பிள்ளைப் பேறின்மை போன்றவை நீங்கி வீட்டில் மங்கல விஷயங்கள் உடனே நடைபெறும்.

3. மனை, வீடு, சொத்து போன்ற விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். சொத்து சேரும்.

4. இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள், உறவுச் சிக்கல்கள் தீரும். புரிந்து கொள்ளாத நண்பர்கள் கிட்ட வருவார்கள்.

5. உழைப்புக்கேற்ற பலன்கள் உடனடியாகக் கிடைக்க வரும். பழிகள் நீங்கி புகழும் செல்வாக்கும் உயரும்.

6. விபத்து, நோய், மருத்துவ செலவுகள், கடன், வீண் விரயங்கள் போன்றவை மாறும். சேமிப்பு உயரும்.

7. மனநிம்மதி இல்லாமல் தூக்கம் இல்லாமல் தவித்து வந்த உங்களுக்கு மொத்தத்தில் இந்த பிரம்மஹத்தி பரிகார ஹோமம் அற்புதமான பரிகாரமாக விளங்கி நலமும் வளமும் தரும்.

QR CODE FOR BRAMMAHATHTHI HOMAM

பிரம்மஹத்தி ஹோமம்

வாசகர்களின் கவனத்துக்கு!

இந்த ஹோம வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஹோம பஸ்பம், ரட்சை மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். வாசகர்கள், இந்த வழிபாட்டு வைபவங்களை சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வீடியோ வடிவில் தரிசிக்கலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *