
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் நேற்று பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தனர்.
இன்று அந்தச் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் பேசிவருகிறார்.
“நேற்று நடந்த ஆபரேஷன் மஹாதேவில், பஹால்காம் தாக்குதலில் சம்பந்தப்பட்ட மூன்று தீவிரவாதிகள் தான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அப்பாவி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில், அவர்களின் மதம் என்ன என்று கேட்டு கொல்லப்பட்டனர். இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை நான் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
(மேலும் விவரங்கள் இங்கு தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்)