
ஓபிஎஸ் தன்னிடம் கேட்டிருந்தால் பிரதமரை சந்திக்க நேரம் வாங்கித் தந்திருப்பேன் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாகத் தமிழ்நாடு வந்தப்போது அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்து ஓபிஎஸ் வெளிப்படையாகவே கடிதம் அனுப்பினார். திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியின் வரவேற்பை பிரதமர் மோடி ஏற்றார்.
ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு வரவேற்பு அளிக்கக் கூட பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கவில்லை என்பதால் அவருடைய ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று (ஜூலை 28) சங்கரன் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் , “பிரதமரை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கேட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

குறிப்பாக அவர்கள் சந்திக்க அனுமதி கேட்டார்களா? இல்லையா? என்பது கூட எனக்குத் தெரியாது. எனக்கு தெரிந்திருந்தால் நிச்சயம் பிரதமரை சந்திக்க அவருக்கு நேரம் வாங்கித் தந்திருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.