
புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவர்கள், தாங்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க பிறப்பு சான்று, பாஸ்போர்ட், குடியிருப்பு சான்று போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் எழுந்து உள்ளது.
இந்த சூழலில் பிஹார் தலைநகர் பாட்னாவின் சவுரி பகுதியில் ‘டாக் பாபு' என்ற பெயரில் வளர்ப்பு நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. டாக் பாபுவின் தந்தை பெயர் குடா பாபு, தாயின் பெயர் குடி தேவி என்று சான்றிதழில் குறிப் பிடப்பட்டு உள்ளது.