• July 29, 2025
  • NewsEditor
  • 0

ஜூலை 30, 2025 அன்று ‘2025 OL1’ என்ற சிறுகோள் பூமியை நெருக்கமாகக் கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த சிறுகோள் விமானத்தின் அளவைப் போன்றது, ஆனால் இது பூமியைப் பாதுகாப்பாகக் கடந்து செல்லும், எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று கூறப்பட்டுள்ளது.

நாசா தகவலின்படி, இந்த சிறுகோள் சுமார் 110 அடி அகலமானது. பயணிகள் விமானத்தின் அளவுடன் ஒப்பிடப்பட்ட இது மணிக்கு கிட்டத்தட்ட 27,200 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து, பூமியிலிருந்து 12.9 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தூரம் பாதுகாப்பானதாகத் தோன்றினாலும், விண்வெளி அளவில் இது கண்காணிக்கப்பட வேண்டிய அளவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்து இல்லை ஆனால்..

நாசா அதிகாரிகள் இந்த விண்கல் ஆபத்தானது இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஒரு விண்பொருள் ஆபத்தானதாக வகைப்படுத்தப்பட, அது 74 லட்சம் கிலோமீட்டருக்குள் வரவேண்டும், குறைந்தது 85 மீட்டர் அகலமாக இருக்க வேண்டும். 2025 OL1 இந்த இரண்டு அளவுகோல்களையும் பூர்த்தி செய்யவில்லை. இருப்பினும் விண்வெளி விஞ்ஞானிகள் தொடர்ந்து அதனை கண்காணித்து வருவதாக கூறுகின்றனர்.

இஸ்ரோவின் பங்களிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ (ISRO) இந்த நிகழ்வை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இஸ்ரோவின் தலைவர் எஸ். சோமநாத் கிரக பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும் நாசா ஐரோப்பிய விண்வெளி அமைப்பு (ESA) மற்றும் ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (JAXA) ஆகியவற்றுடன் இணைந்து எதிர்கால திட்டங்களில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *