• July 29, 2025
  • NewsEditor
  • 0

மனித கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டில் கேரளாவை சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் உள்ள துர்க் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இதனால், நேற்று, கேரளா முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய இரு கன்னியாஸ்திரிகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கின்றன.

கேரளாவைச் சேர்ந்த குறிப்பிட்ட கன்னியாஸ்திரிகள்

கேரளாவைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகளின் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “சத்தீஸ்கரில் பஜ்ரங் தளத்தால் கேரள கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தலுக்கும், பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகியிருப்பதைப் பார்ப்பது மிகவும் கவலையளிக்கிறது.

இலக்கு வைக்கப்பட்ட இந்தக் கும்பல் நடவடிக்கை, அரசின் செயலற்ற தன்மையால் செயல்படுத்தப்பட்ட ஆபத்தான வகுப்புவாதத்தை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் சிறுபான்மையினர் கண்ணியத்திற்கும், சம உரிமைகளுக்கும் தகுதியானவர்கள், பயத்திற்கு அல்ல.” என்று தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *