
தஞ்சாவூர்: தஞ்சாவூர் முத்துக்குமார மூப்பனார் சாலையில் திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயம் உள்ளது. இந்நிலையில், 2010 முதல் 2025-26-ம் நிதியாண்டு வரை மாநகராட்சிக்கு சொத்துவரி புதைசாக்கடை வரி என ரூ.34,46,396-ஐ 15 நாட்களுக்குள் செலுத்துமாறு கலைஞர் அறிவாலயத்துக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறும்போது, ‘‘கலைஞர் அறிவாலயத்துக்கு வணிகப் பயன்பாட்டுக்கான வரி செலுத்துமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அறிவாலயத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் நூலகம் இருப்பதால், வணிகப்பயன்பாட்டு வரியை நீக்குமாறு பலமுறை மனு அளித்தும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. வரியை குறைத்தால், வரியை முழுமையாகச் செலுத்த தயாராக உள்ளோம்’’ என்றனர்.