
சென்னை: கம்யூனிச இயக்கம் மாறாத தன்மையோடு நிலைத்து நின்று மக்களுக்காக போராடி வருகிறது என்று புத்தக வெளியீட்டு விழாவில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் சார்பில் கவிஞர் ஜீவ பாரதி எழுதிய ‘காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்’ நூலை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக்கொண்டார்.
அப்போது தங்கம் தென்னரசு பேசியது: காலங்கள் மாறிக்கொண்டிருக்க முடியும். ஆனால், கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மாறுவது இல்லை. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது கணிதத்துக்கு பொருத்தமாக இருக்கலாம்.