
நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாள் இன்று.
மலையாளம், தமிழ், தெலுங்கு எனத் தென்னிந்திய சினிமாவில் தொடர்ச்சியாகப் பல ஹிட் படங்கள் கொடுத்து கவனம் ஈர்த்து வருகிறார். குறிப்பாக, துல்கர் கடைசியாக நடித்திருந்த ‘லக்கி பாஸ்கர்’ இந்திய அளவில் மொழிகள் தாண்டி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து அவரது பிறந்த நாளான இன்று செல்வமணி செல்வராஜ் இயக்கும் துல்கர் சல்மானின் ‘காந்தா’ டீஸர் வெளியிடப்பட்டது.
துல்கரின் 42வது பிறந்த நாளான இன்று திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அவ்வகையில் ‘Varane Avashyamund’ படத்தில் துல்கருடன் நடித்த கல்யாணை பிரியதர்ஷன், “துல்கரின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் நிறைய எழுதி நீண்ட பதிவினைப் பதிவிட்டு வாழ்த்துத் தெரிவிப்பேன்.
இந்தப் பிறந்த நாளில் கொஞ்சம் ஸ்பெஷலாக நான் நடிக்கும் ‘Lokah – Chapter 1’ படத்தின் டீஸரைப் பகிர்ந்து வாழ்த்துச் சொல்கிறேன். எனக்கு வாய்ப்பளித்து, இந்தப் படத்தை அவரே தயாரிக்கிறார் என்பது கூடுதல் ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது.
திரையுலகிலும், தனிப்பட்ட வாழ்விலும் எனக்கு எப்போதும் பக்க பலமாக இருப்பவர் துல்கர். கடந்த ஐந்து ஆண்டுகளாக எனக்கு எந்தப் பிரச்னை என்றாலும் முதலில் எனக்காக வந்து நிற்பது, அறிவுரைகள் வழங்குவது அவராகத்தான் இருக்கும்.
நான் தனியாக உணர்ந்ததில்லை அதற்குக் காரணம் நீங்கள்தான். நீங்கள் இல்லையென்றால் நான் என்னவாகிருப்பேன் என்றே எனக்குத் தெரியாது. அந்த அளவிற்கு எல்லா தருணங்களிலும் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறீர்கள்” என்று நேர்காணல் ஒன்றில் நெகிழ்ச்சியுடன் துல்கருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறியிருக்கிறார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…