
குழந்தைகள் முதல் வயதானவர்கள் பலரும் தெருநாய்க்கடி சம்பவங்களால் பாதிக்கப்படுவதும், சில சமயங்களில் உயிரிழப்பதும் அனைத்து மாநிலங்களிலும் பெரும் பிரச்னையாக இருக்கிறது.
இந்த நிலையில், தெருநாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முடிவெடுத்திருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் முன்னணி நாளிதழில் வெளியான நாய்க்கடி சம்பவங்கள் மற்றும் அதன் உயிரிழப்புகள் தொடர்பான செய்தியை மேற்கோள் காட்டி இன்று பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, “தினந்தோறும் வெளியாகும் நூற்றுக்கணக்கான தெருநாய்க்கடி சம்பவங்கள் பெரும் அச்சத்தை கொடுத்திருக்கிறது.
தெருநாய்க்கடி பாதிப்பினால் ரேபிஸ் நோய்த் தொற்று ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்து வருவதும், குறிப்பாக தெருநாய்க்கடி சம்பவங்களுக்கு குழந்தைகளும் வயதானவர்களும் பலியாகி வருவதும் அபாயகரமானதாக இருக்கிறது.

எனவே, வெளிவந்திருக்கும் இந்த செய்தியின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து இந்த விசாரிக்க இருக்கிறது.
இதனை உச்ச நீதிமன்ற பதிவாளர் தலைமை நீதிபதி அமர்வு முன்பு எடுத்துச் செல்ல வேண்டும். பிறகு, தலைமை நீதிபதி இந்த விவகாரத்தை எவ்வாறு விசாரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்” என்று தெரிவித்தார்.