
ரஷ்யா – உக்ரைன் போர் முற்றுப்பெறவில்லை என்றால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சிரித்திருக்கிறார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் எதிர்த்து வருகிறது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எப்போது எண்ணெய் வாங்க தொடங்கியது?
பொதுவாக, இந்தியா மத்திய கீழக்காசிய நாடுகளில் இருந்து தான் எண்ணெய் வாங்கும்.
2022-ம் ஆண்டும், ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது அதிக வரியை விதித்தது. இதை சமாளிக்க, ரஷ்யா எண்ணெயை குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.
இதனால், இந்தியா மத்திய கிழக்காசிய நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்வதை மாற்றி, ரஷ்யாவிடம் சென்றது. ஆனால், தற்போது இதை பல மேற்கத்திய நாடுகள் விரும்பவில்லை.
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது ஏன் என்பது குறித்து இங்கிலாந்துக்கான இந்திய உயர் கமிஷனர் விக்ரம் துரைசாமி இங்கிலாந்து ரேடியோ ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
“இந்தியா – ரஷ்யா, ரஷ்ய அதிபர் புதின் உடனான நெருக்கத்தைப் பொறுத்தவரை, அதில் ஏகப்பட்ட விஷயங்கள் அடங்கி இருக்க்கிறது.
அதில் ஒன்று தான், பாதுகாப்பு குறித்த எங்களுடைய நீண்ட கால உறவு. சில ஆண்டுகளுக்கு முன்பு, சில மேற்கத்திய நாடுகள் எங்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யாது. ஆனால், எங்களுடைய பக்கத்து நாடுகளில் விற்பனை செய்யும். அவர்கள் அதை எங்களை தாக்க பயன்படுத்துவார்கள். ஆனால், அப்போது ரஷ்யா எங்களுக்கு ஆயுதத்தை விற்பனை செய்தது.
ஏன் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தியை இறக்குமதி செய்கிறது?
நாங்கள் முன்பு எந்த நாடுகளிடம் இருந்து எரிசக்தியை இறக்குமதி செய்து வந்தோமோ, அந்த நாடுகளிடம் இருந்து பிற நாடுகள் இறக்குமதி செய்ய தொடங்கியது.
அதனால், நாங்கள் பெரியளவில் எரிசக்தி சந்தையில் இருந்து விலக்கப்பட்டோம். விலையும் கூடிவிட்டது.
உலகிலேயே மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வு நாடு இந்தியா. நாங்கள் 80 சதவிகித எரிசக்தி பொருள்களை இறக்குமதி செய்கிறோம்.

இப்படியிருக்கையில், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நாங்கள் எங்களது பொருளாதாரத்தை மூட வேண்டுமா?
இந்தியர்களை வாங்காதீர்கள் என்று கூறிவிட்டு, இன்னும் பல ஐரோப்பிய நாடுகள் அதே நாட்டில் இருந்து அரிய கனிமங்கள் மற்றும் பிற எரிசக்தி பொருள்களை வாங்கி வருகிறது. இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது என்று தோன்றவில்லையா?
ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து மோடி சொல்வது என்ன?
எங்களுக்கு பிரச்னை உள்ள நாடுகளுடன் பிற நாடுகள் நட்பாக இருப்பதை நாங்கள் பார்க்கிறோம். அதனால், அவர்களது நேர்மையை சோதிக்க கூறுகிறோமா?
‘இது போருக்கான காலம் அல்ல’ என்பதை பிரதமர் மோடி பல முறை ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து கூறிவிட்டார்.
இதை அவர் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடமோ நேரடியாகவே தெரிவித்திருக்கிறார்.
உலகில் உள்ள பிற போர்கள் எப்படி முடிய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதே மாதிரி, இந்தப் போரும் முடிய வேண்டும் என்று தான் நினைக்கிறோம்”.