‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தற்போது இவர் ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஜூலை 31-ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில், திருப்பதியில் நடந்த படத்தின் புரோமோஷன் நிகழ்வில் உரையாற்றிய விஜய் தேவரகொண்டா, கிங்டமில் முக்கிய வேடத்தில் நடித்த வெங்கடேஷ் என்ற வளர்ந்து வரும் நடிகரைப் புகழ்ந்துப் பாராட்டிப் பேசினார். அதைத் தொடர்ந்து அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “இந்த உலகத்துக்கு வெங்கடேஷ்… அதாவது கிங்டம் படத்தின் முருகனை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.
அவருடன் எனது காட்சிகளை படமாக்கப்பட்டபோது நான் அவரது உலகில் இருப்பது போல் உணர வைத்தார். தீவிர நடிகர், மூர்க்கமான கண்களுடையவர். ஆனால் ஆற்றல்மிக்க இனிமையான ஆன்மா. திரையுலகில் அவர் ஒரு வலுவான முத்திரையைப் பதிப்பார்” என வாழ்த்திப் பதிவிட்டிருக்கிறார்.

வெங்கடேஷ்:
மலையாள நடிகரான வெங்கடேஷ், மலையாளத் திரைப்படங்களில் முக்கியமான மற்றும் துணை வேடங்களில் நடித்துள்ளார். 2017-ல் வெளியான “வேலிபாடின்டே புஸ்தகம்” என்ற படத்தில் ஒரு சிறிய, கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் தொடங்கிய இவரின் திரைப்பயணம், தொடர்ந்து மோகன் லால், மம்முட்டி போன்ற மலையாளத் திரை நட்சத்திரங்களுடன் சில காட்சிகளில் நடித்திருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் நடித்து சினிமா ரசிகர்களிடம் கவனம் பெற்றுவருகிறார். இந்த நிலையில்தான் விஜய் தேவரகொண்டாவின் வாழ்த்தைப் பெற்றிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…