
பாலிவுட் இயக்குநர் மோஹித் சூரி இயக்கத்தில், அறிமுக நடிகர்கள் அஹான் பாண்டே, அனீத் பட்டா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘SAIYAARA’.
இந்தியாவில் இந்தப் படத்தின் முதல் நாள் கலெக்ஷன் மட்டும் 20 கோடி. புதுமுகங்கள் நடித்து வெளியான ஒரு படம் இவ்வளவு வசூல் செய்தது இதுவே முதன் முறை. 2025ல் முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்திப் பட வரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்திருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.
புதுமுகங்கள் மட்டுமே நடித்து வெளியான ஒரு படம் சூப்பர் ஸ்டார் படங்கள் அளவுக்கு வசூல் செய்வதுதான் இப்போது இந்திய சினிமாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தப் படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் நடிகை ஜோதிகா `Saiyaara’ படத்தைப் பாராட்டி இருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” சண்டை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள், ஐட்டம் சாங் என வெளிவரும் படங்களுக்கு மத்தியில், உணர்வுகளையும், இசையையும், தேர்ந்த எழுத்தையும் கொண்டு வந்திருக்கிறது SAIYAARA திரைப்படம்.

இந்த ஆழமான கதைக்காகவும், மனதைக் கவரும் திரைக்கதைக்காகவும் சகோதரர் சங்கல்ப் சடானாவை பெருமையாக நினைக்கிறேன். மோஹித் சூரி, அனீத், அஹான் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உண்மையிலேயே இப்படம் இந்தி சினிமாவின் STAR தான்” என்று பாராட்டி இருக்கிறார் ஜோதிகா.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…