
எல்லைப் பிரச்னை காரணமாக தாய்லாந்து – கம்போடியா இடையே கடந்த வாரம் போர் தொடங்கியது.
‘அவர்கள் தான் முதலில் தொடங்கினார்கள், இவர்கள் தான் முதலில் தொடங்கினார்கள்’ என்று மாறி மாறி இரு நாடுகளும் குற்றம்சாட்டி வந்தன.
இந்தப் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வந்தன. இதன் விளைவாக, தற்போது இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்துள்ளது.
பேச்சுவார்த்தை எங்கே?
இந்தப் பேச்சுவார்த்தை இன்று மலேசியாவில் நடக்க உள்ளது.
தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் பும்தம் வெச்சயாச்சய் கலந்துகொள்கிறார்.
கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட்டும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியா மற்றும் அமெரிக்கா
இந்தப் பிரச்னை தொடங்கிய உடனேயே, மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் போர் நிறுத்தத்தை முன்மொழிந்தார். தாய்லாந்து, கம்போடியா பேச்சுவார்த்தைக்கு சம்மதித்ததில், இவருடைய முக்கியப் பங்கு உண்டு.
அடுத்ததாக, நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடுகளின் பிரதமர்களுடனும் தொலைபேசி மூலம் பேசியிருந்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அவர்கள் போரை நிறுத்தவில்லை என்றால், அவர்களுடன் உடனான அமெரிக்காவின் வணிக ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்” என்று பேசியிருந்தார்.
இன்று நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ… அதைப் பொறுத்து தான் போர் நிறுத்தம் வருவதும்… வராததும்!