• July 28, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: தமிழகத்​துக்கு நிபந்​தனை​யின்றி ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்​டும் என்பது உள்​ளிட்ட கோரிக்கைகளை வலி​யுறுத்​தி, தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சார்​பில் பிரதமர் மோடி​யிடம் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு மனு வழங்​கி​னார். திருச்​சிக்கு நேற்று முன்​தினம் இரவு வந்த பிரதமர் மோடி​யிடம், முதல்​வர் சார்​பில் கோரிக்கை மனுவை தமிழக நிதியமைச்​சர் தங்​கம் தென்​னரசு வழங்​கி​னார்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: சமக்ரா சிக் ஷா திட்​டத்​தின் கீழ் தமிழக அரசுக்கு மத்​திய அரசு நிதி வழங்​காமல் இருப்​ப​தால் லட்சக்கணக்​கான மாணவ, மாணவி​களின் எதிர்​காலம் பாதிக்​கப்​பட்டு வரு​கிறது. எனவே, 2024-25-ம் நிதி​யாண்​டுக்கு நிலு​வை​யில் உள்ள ரூ.2,151.59 கோடியை​யும், 2025-26-ம் ஆண்​டுக்​கான முதல் தவணை நிதி​யை​யும், பிஎம்ஸ்ரீ புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட வேண்​டுமென நிபந்​தனை விதிக்​காமல் விரைந்து வழங்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *