
மீண்டும் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்து பணிபுரிய திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கூலி’. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இப்படத்தின் இறுதி பதிப்பை பார்த்த ரஜினி, லோகேஷ் கனகராஜை வெகுவாக பாராட்டியிருக்கிறார். மேலும், மீண்டும் இணைந்து பணிபுரியலாம் என்று கூறியிருக்கிறார். இதனால் பெரும் உற்சாகமாகன லோகேஷ் கனகராஜ், ரஜினிக்காக வேறொரு கதையை தயார் செய்துவிட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்.