
சென்னை: "உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். அதனால்தான் முதல்வர் தனியார் மருத்துவமனைக்கு சென்றார்" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு மருத்துவத் துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மக்களைத் தேடி மருத்துவம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் என்று மிகப் பெரிய அளவிலான சிறப்பு திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.