
சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் மற்றும் படிகள் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டது. அந்த தேதிக்கு முன்பு பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,370 என்றும், அதே தேதிக்கு பின் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. இதன் விளைவாக, 2009-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதிக்கு பின் பணியமர்த்தப்பட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சுமார் ரூ.25 ஆயிரம் அளவுக்கு இன்று குறைவான ஊதியத்தை பெற்று வருகின்றனர்.