
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பணியாற்றி வரும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து உச்ச நீதிமன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பணியாற்றி வரும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்குகிற தீர்ப்புகளின் தன்மை அரசியல் சாசன நெறிகளிலிருந்து பிறழ்ந்து, அநீதி இழைப்பதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கருதுகிறார்.