
பெங்களூரு: கர்நாடகாவில் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்காக 31 மாவட்டங்களிலும் உண்டு உறைவிட பள்ளிகளை அமைக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை தேடி வேறு இடங்களுக்கு இடம்பெயர்வதால் அவர்களின் குழந்தைகளின் கல்வி வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் மாவட்டம்தோறும் உண்டு உறைவிட பள்ளிகளை ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.