
நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிசில்டாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கோவை மாதம்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். சமையல் கலைஞராக இருந்து நடிகராக உயர்ந்திருப்பவர். இவருக்கு ஸ்ருதி என்பவருடன் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று இவர்களுக்கு தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு என்றும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது. இவர்களுக்கு விவாகரத்து ஆகி விட்டதா என்பது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
Baby loading 2025
We are pregnant
6th month of pregnancy #madhampattyrangaraj #MrandMrsRangaraj #chefmadhampattyrangaraj pic.twitter.com/wA9s87AswJ— Joy Crizildaa (@joy_stylist) July 27, 2025
மறுமணம் செய்து கொண்டாரா மாதம்பட்டி ரங்கராஜ்? – வைரலாகும் ஆடை வடிவமைப்பாளரின் பதிவு!
இந்நிலையில் தற்போது ரங்கராஜ்- ஜாய் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்துகொண்ட ஆடை வடிவமைப்பாளர் ஜாய், தனது சமூகவலைதள பக்கத்தில் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த ஆண்டு குழந்தை வரப்போவதாகவும் ‘Baby loading 2025 We are pregnant 6th month of pregnancy’ எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…