
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குறுஞ்செய்தி மூலம் குறிப்பிட்ட பக்தர்களை மட்டும் தரிசனத்துக்கு முன்னுரிமை கொடுத்து அனுப்பும் முறைகேடு தொடர்பாக, பக்தர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திரண்டு வந்து தரிசனம் செய்கின்றனர்.