
தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வந்திருக்கும் பிரதமர் மோடி நேற்று துத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட புதிய விமான நிலைய முனையத்தைத் திறந்து வைத்தார்.
இதையடுத்து இன்று கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவில் கலந்துகொள்கிறார். இதற்காக நேற்று இரவு திருச்சியில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கிறார் மோடி. திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.கவினர் மோடியை வரவேற்று பேசியிருக்கின்றனர். பாஜகவுடனான கூட்டணி அறிவிப்புக்குப் பின் முதல் முறையாக பிரதமரைச் சந்தித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இன்று அதிகாலை ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்குச் சென்றிருக்கிறார் மோடி. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வரை கங்கை கொண்ட சோழபுரத்தில் இருப்பார் என்று கூறப்படுகிறது.
சாமி தரிசனம் செய்த பின்னர் விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். இசையமைப்பாளர் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடக்கிறது. இளையராஜா இசையில் ‘பகவத் கீதை’ வரிகளில் உருவாக்கப்பட்ட இசைத் தொகுப்பை மோடி வெளியிடுகிறார்.
இதுதவிர, திருச்சி விமான நிலையத்திற்கு இராஜேந்திர சோழனின் பெயரை சூட்ட வேண்டும், நெதர்லாந்தில் உள்ள ஆனைமங்கலம் செப்பேட்டை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு கோரிக்கைகள் ஏற்கெனவே பிரதமர் மோடியிடம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அறிவிப்புகள் ஏதுவும் வர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் அரியலூர் மாவட்டம் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் அமைந்துள்ள பகுதி முழுவதும் போலீஸார் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளை முடித்துவிட்டு அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். பிற்பகல் 2.25 மணிக்கு அந்த ஹெலிகாப்டர் திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியதும், 2.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs