
யாஷ், நயன்தாரா, ஹூமா குரேஷி என பலர் நடிக்கும் படம், ‘டாக்ஸிக்’. கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். கேவிஎன் புரொடக் ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா, யாஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.
கன்னடம், ஆங்கில மொழிகளில் உருவாகும் இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இதன்ஷுட்டிங் மும்பை கோரேகானில் சமீபத்தில் தொடங்கியுள்ளது. அங்கு பயங்கரமான ஆக் ஷன்
காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் யாஷ், தாரா சுதாரியா, அக் ஷய் ஓபராய், ஹூமா குரேஷி பங்குபெறும்
காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.