
பெங்களூரு: கர்நாடகாவில் 10-ம் வகுப்பில் தேர்ச்சிக்கு 33 சதவீத மதிப்பெண் பெற்றாலே போதும் என்று அந்த மாநில அரசு விதிமுறையை மாற்ற திட்டமிட்டுள்ளது.
கர்நாடக மாநில தேர்வு மற்றும் மதிப்பீட்டு ஆணையம் இது தொடர்பான பரிந்துரையை மாநில கல்வித்துறைக்கு அனுப்பியுள்ளது. அதில், “10-ம் வகுப்பில் ஒரு பாடத்தில் 35 மதிப்பெண்ணுக்கு பதிலாக 30 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெறலாம். மொத்த மதிப்பெண்ணில் 625-க்கு 33 சதவீதமான 206 மதிப்பெண் எடுத்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மொழிப்பாட மதிப்பெண்ணை 125-ல் இருந்து 100 ஆக குறைக்கலாம்” என தெரிவித்துள்ளது.